Sunday, April 26
Shadow

விஷால் ரசிகர்கள் நற்பணி இயகத்தின் பறக்கும் படையினரின் திருட்டு டிவிடி வேட்டை !

விஷால் நடித்து வெளியாகியுள்ள துப்பறிவாளன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது . இந்நிலையில் இந்த படத்தின் திருட்டு ‘டிவிடி’களும் வெளிவந்துள்ளது. விஷால் ரசிகர்கள் நற்பணி இயகத்தின் சார்பில் ஐந்து பேர் வீதமுள்ள பத்து ‘பறக்கும் படை ” குழுக்கள் தமிழகமெங்கும் திருட்டு டிவிடிகளின் விற்பனையை தடுக்கும் வகையில் தீவிரமாக சோதனைகள் மேற்கொண்டுள்ளது. இவர்கள் இன்று நாகபட்டினத்திலுள்ள ஸ்ரீ லட்சுமி மியுசிக்கல்ஸ் என்ற கடையில் சோதனையிட்டு துப்பறிவாளன் ,

நெருப்புடா ஆகிய புதிய திரைப்படங்களின் திருட்டு ‘டிவிடி’களை கைப்பற்றி கடையின் உரிமையாளரை போலீசாரிடம் ஓப்படைத்தனர். இது தொடர்பாக தென்னிந்திய திரைப்படம் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக N.ராஜசேகரன் மற்றும் நாகை மாவட்ட விஷால் ரசிகர்கள் நற்பணி இயகத்தின் தலைவர் ராஜா ஆகியோர் திருட்டு டிவிடி’களை விற்பனை செய்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் இவர்களை கடலூர் CB CID கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் தமிழகத்தின் பல இடங்களிலும் புதிய படங்களின் திருட்டு டிவிடி’கள் தயாரிக்கப்படுவதை பற்றி துப்பு கிடைத்துள்ளதின் அடிப்படையில் விஷால் ரசிகர்களின் பறக்கும் படையினரின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தங்கள் பகுதியில் ஏதேனும் திருட்டு VCD விற்பதை அறிந்தால் கிழ்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விபரம் அளிக்குமாறு அகில இந்தியா விஷால் ரசிகர்கள் நற்பணி இயகத்தின் சார்பாகவும், தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

அலைபேசி எண் : 9444200599,
தொலைபேசி எண் :044-28294780,
Email Id: piracy@tfpc.org

Leave a Reply