Saturday, April 25
Shadow

கதறும் விஜய் டிவி கதறவிடும் பிக் பாஸ் கமல் ஹாசன் தொடருமா பிக் பாஸ் கமல் ?

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று மிக பெரிய அளவில் வெற்றி அதற்கு முக்கிய காரணம் உலக நாயகன் கமல் ஹாசன் தான் என்பது நாம் அறிந்த விஷயம் கமல் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என்பது மிக பெரிய விஷயம் காரணம் இவரின் பேட்டி பண்ண்டிகை இல்லை என்றால் அவரின் படம் வெளியாகும் நேரங்களில் மட்டும் தான் பார்க்கமுடியும் அப்படி பட்ட நட்சத்திரம் வாரம் வாரம் தோன்றி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் எப்படி இருக்கும் என்று திட்ட போட்ட விஜய் டிவி இன்று கண்ணீர் வடிகிறது.

கமல்ஹாசனை தொகுப்பாளராக போட்டு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தமிழில் தொடங்கிய விஜய் டிவி, எவரஸ்ட் சிகரத்தையே தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து வந்தது போல பெருமைப்பட்டுக்கொண்டது. ஆனால், விஜய் டிவி-யின் இந்த பெருமை நிலைக்காமல் போய்விடும் அளவுக்கு தற்போது கமல்ஹாசனின் செய்கை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து டிஸ்கன் நடத்துவதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கமல்ஹாசனுக்கு அறை புக் செய்யப்பட்டதாம். வாரம் இரண்டு நாட்கள் இங்கு அமர்ந்து தான் பிக் பாஸ் குழுவினர் நிகழ்ச்சி குறித்து பேசுவார்களாம்.

இந்த நிலையில், நிகழ்ச்சி தொடங்கும் போது போடப்பட்ட அறையை கமல்ஹாசன் இன்னும் காலி செய்யவில்லையாம். மாறாக அவரது வீட்டை காலி செய்துவிட்டாரோ! என்று நினைக்க தோன்றும் அளவுக்கு எந்நேரமும் அந்த நட்சத்திர ஓட்டல் அறையிலேயே இருப்பவர், அங்கு செய்யும் செலவுகளின் பில்லையும் விஜய் டிவி-க்கே அனுப்புகிறாராம்.

இப்படி தினமும் கமல்ஹாசன் அனுப்பும் பில்லை செட்டில் செய்யும் விஜய் டிவி, “இது தாங்காது சார்…விட்ருங்க…” என்று அவரிடம் சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் உள்ளுக்குள் கதறிக்கொண்டிருக்கிறதாம்.

Leave a Reply