Sunday, April 26
Shadow

அரவிந்த்சாமி மற்றும் அமலாபால் நடிக்கும் பாஸ்கர் தி ராஸ்கல் படபிடிப்பு முடிந்தது டீசர் விரைவில்

மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் . இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி, அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளனர். நாசர், சூரி, ரோபோசங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர்ராகவ் பேபி நைனிகா மற்றும் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப் ஷிவ்தசானி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விட்ட நிலையில் தற்போது படக்குழுவினர் படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்துள்ளனர். டீசர் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவக்கப்படும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply