Wednesday, October 28
Shadow

வார்த்தை விட்டதால் வம்பில் மாட்டிகொண்ட நயன்தாரா எதை பற்றி தெரியுமா ?

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நயன்தாரா, இவர் தற்போது அதிகமாக ஹீரோஹின்களை மையமாக கொண்டு உருவாகும் கதைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள அறம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது, இது பற்றி பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த போது இவரிடம் நடிகைகளிடம் நடிகர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது நயன்தாரா, அஜித்தை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது அஜித்தை போல ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை, பெண்களுக்கு மதிப்பளித்து நடிப்பவர். அவர்களது அருகில் பெண்கள் வந்தாலே எழுந்து நின்று மரியாதை கொடுத்து பேசுவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அப்படி தான் என கூறியுள்ளார்.

இவர் பேசும் போது தளபதி விஜயை பற்றி கூறவில்லை, நயன்தாரா தளபதியுடன் சேர்ந்து நடித்தும் அவரை பற்றி பேசாமல் விட்டதால் தளபதி ரசிகர்கள் அவர் மீது பயங்கர கோபத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.

Leave a Reply