
தமிழ் சினிமாவில் உலக அளவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட ஒரு நடிகர் என்றால் அது விஜய் என்று சொல்லலாம். விஜய் தான் மூச்சு என்று வாழும் ரசிகர்கள் இவருக்கு உண்டு என்று தான் சொல்லணும் ஏன் முதலில் இவருக்கு தான் இவர் ரசிகர்கள் கோவில் கூட கட்டினார்கள்
தளபதி விஜய் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி உற்சாகம், இன்னும் இவரது படங்கள் ரிலீஸ் என்றால் சொல்லவே தேவையில்லை ரசிகர்களுக்கு ஒரே ஆரவாரமும் அளவில்லாத கொண்டாட்டமும் தான்.
இத்தகைய ரசிகர்கள் கூட்டத்தை உடைய தளபதி விஜயிடம் பிடித்தது எது என்று எங்களது இணையதளத்தில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.
அந்த கருத்து கணிப்பில் நடனம், டைலாக், நடிப்பு மற்றும் அவரது உதவும் மனப்பான்மை போன்றவை இடம் பெற்றிருந்தன. இதில் 46% பேர் உதவும் மனப்பான்மையை தேர்வு செய்துள்ளனர்.
அடுத்ததாக 31% பேர் அவரது நடனத்தை தேர்வு செய்துள்ளனர், மேலும் 15% பேர் நடிப்பாற்றலையும் 8% பேர் வசனத்தையும் தேர்வு செய்துள்ளனர்.
