
அஜித் தனது காதல் மனைவி ஷாலினியை மிகவும் மரியாதையுடன் நடத்தும் நபர் அஜித். பெரும்பாலும் ஷாலினியை பெயர் சொல்லிக் கூட அழைக்க மாட்டாராம் டார்லிங் என்று மட்டுமே செல்லமாக கூப்பிடுகிறார். அதே போல தான் வீட்டை விட்டு வெளியேறும் போது, ஷாலினியை செல்லமாக ஹக் செய்து லவ் யூ சொல்லி தான் கிளம்புகிறார் அஜித்.
டிப்ஸ்: தனியாக இதிலிருந்து டிப்ஸ் கூற தேவையில்லை. அஜித் பின்பற்றும் இந்த முறையை நீங்களும் பின்பற்றினால், வீட்டில் பெரிதாக சண்டையே வராது. பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவனுடன் எதிர்பார்ப்பது இது போன்ற சின்ன சின்ன அன்பான விஷயங்கள் தான்.
தனது வேலை மற்றும் இல்லறத்தை சரி பங்காக பிரித்து காண்பவர் அஜித். இரண்டையும் இரு கண்களாகவே வைத்துள்ளார். வீட்டில் வேலையையும், வேலையில் வீடு சார்ந்த விஷயங்களையும் கலந்து தன்னை குழப்பிக் கொள்பவர் அல்ல அஜித்.
அதனால் தான், படத்தை நடித்து முடித்த பிறகு, அதன் வெற்றி, தோல்வி பற்றியோ, ப்ரமோஷன் விஷயங்களுக்கோ அஜித் பெரிதாக தலை காட்டுவதும் இல்லை, கருத்து கூறுவதும் இல்லை.
டிப்ஸ்: ஆண்கள் செய்யும் பெரிய தவறே, வீட்டு டென்ஷனை அலுவலகத்தில் காண்பிப்பது, அலுவலக டென்ஷனை வீட்டில் காட்டுவது. இதனால் வீட்டிலும் பிரச்சனை, அலுவலகத்திலும் பிரச்சனை வரும். எனவே, இதில் நீங்கள் சரியாக கையாள துவங்கினாலே போதும், எல்லாம் சுபமாக அமையும்.

அஜித் தனது பழைய வீட்டை முழுவதும் இடித்துவிட்டு, டெக்னாலஜியுடன் புதிதாக கட்டியிருக்கிறார். இந்த வீட்டை முழுவதும் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்க முடியுமாம்.
டிப்ஸ்: நீங்கள் வீட்டை இடித்து புதுமையாக மாற்ற வேண்டும் என்பதெல்லாம் இல்லை. உங்கள் வீட்டில் இருப்பவரின் விருப்பத்திற்கு ஏற்ப உங்களால் என்ன செய்ய முடியுமோ, அதை தவறாமல் செய்யுங்கள். மனைவி, குழந்தைகளின் விருப்பதை நிறைவேற்றுங்கள். அது போதும். நீங்கள் வீட்டை உங்கள் கண்ட்ரோலில் வைத்து கொள்ளலாம்.
மனைவி ஷாலினிக்கு பேட்மிட்டன் என்றால் பிரியம். அவரது விருப்பத்திற்கு ஊக்கமளித்து தேவையான அனைத்து வசதிகளும் செய்துக் கொடுத்தார் அஜித். இப்போது அவர் புதுப்பித்துள்ள வீட்டில் கூட, ஷாலினிக்கு தனியாக ஒரு உள்ளரங்க கோர்ட் மற்றும் நடனம் பயிலும் தனது மகளுக்கு தனி டான்ஸ் ஃப்ளோர் அமைத்து கொடுத்துள்ளார் அஜித்.

டிப்ஸ்: உங்கள் மனைவி, குழந்தைகளின் ஆசைகள் என்ன என்பதை கேட்டு, அதை நிறைவேற்றுங்கள். இது அவர்கள் விரும்பும் உடையில் துவங்கி, படிப்பு, வேலை என அனைத்திற்கும் பொருந்தும்.
நான் சொல்றது கேளு என்பதை தவிர்த்து, அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டு, அதற்கு எப்படி உதவலாம் என செயற்பட்டால்… நீங்களே சிறந்த குடும்ப தலைவன்.
