Sunday, April 26
Shadow

சென்னையை கோட்டையை தன் வசம் கொண்டு வந்த விஜயின் மெர்சல்

விஜய் என்றாலே வெற்றியின் சிகரம் என்று பெயர் அதுவும் மெர்சல் ஆரம்பம் முதல் இன்று வரை அது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தான் சொல்லணும் . ஆம் இந்த படம் பல தடைகளை தாண்டி மாபெரும் சாதனைகளை புரிந்து வருகிறது.

சென்னை கோட்டையை தன் பக்கம் வசப்படுத்தியுள்ளார் தளபதி விஜய் ஆம் இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு மிக பெரிய வசூல் மழையை பொழிந்துள்ளது மெர்சல் படத்தின் டைட்டில் க்கு ஏற்ப எல்லோரையும் மெர்சல் பண்ணுது விஜயின் மெர்சல்

இந்நிலையில் தற்போது மெர்சல் படத்தின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. படம் இது வரை சென்னையில் ரூ 12.39 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் ரூ 12.35 கோடி வசூல் செய்திருந்த கபாலி படத்தின் சாதனையை முறியடித்து சென்னையில் மாபெரும் வசூல் படங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

மேலும் விரைவில் ரூ 18.85 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ள பாகுபலி-2 படத்தி வசூலையும் விரைவில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply