Saturday, April 18
Shadow

முடியாது என்பதை முடித்து காட்டிய மெர்சல் விஜய் சாதனை மேல் சாதனை

விஜய் இன்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் மெர்சல் படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற, உலகம் முழுவதும் இப்படம் ரூ 225 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறினர்.

இதுவரை இல்லாத ஒரு வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கில் வலியானது அங்கும் வசூலில் மிக பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஏற்கனவே மலையாளத்தில் மிக பெரிய மார்க்கெட் வைத்து இருக்கும் விஜய் இப்போது தெலுங்கு மார்க்கெட் அவரின் வசம் வந்துள்ளது இதன் மூலம் தென் இந்தியா விஜய் வசம் வந்துள்ளது .

இந்நிலையில் விஜய்க்கு மலேசியாவில் இதுவரை பெரிய மார்க்கெட் எதுவும் உருவாகவில்லை, ஆனால், அஜித்தின் வேதாளம், விவேகம் என இரண்டு படங்கள் அங்கு ரூ 10 கோடி வரை வசூல் செய்தது.

தற்போது மெர்சல் மலேசியாவில் ரூ 18 கோடி வரை வசூல் செய்து, மலேசியாவின் ஆல் டைம் பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இன்னும் ரூ 2 கோடி வசூல் செய்திருந்தால் கபாலி சாதனையையும் மெர்சல் முறியடித்து இருக்கும்.

Leave a Reply