
மெர்சல் வெற்றிக்கு பின் அடுத்த படம் எப்போ யார் நாயகி உடன் நடிப்பவர்கள் யார் என்ற ஆவல் விஜய் ரசிகளிடம் அதிகம் இருப்பது நாம் அறிந்த விஷயம் அடுத்து கத்தி, துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் மேலும் மெர்சல் படத்தில் காமெடியில் கலக்கிய யோகி பாபு தற்போது தளபதி-62 படத்திலும் கமிட்டாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் யோகி பாபு தளபதி விஜயுடன் படம் முழுவதும் சேர்ந்து வருவது போல வலுவான கதாபாத்திரத்தை ஏ.ஆர்.முருகதாஸ் ஒதுக்கியுள்ளதாகவும் யோகி பாபு கூறியுள்ளார்.
