Tuesday, April 28
Shadow

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் அவருக்கு கிடைக்காத பெருமை சிவ கார்த்திகேயனுக்கு கிடச்சிருக்கு!

சிவ்கார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இல்லை இன்று முன்னணி நடிகர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்று சொன்னால் மிகையாகது. காரணம் இன்று அவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் அந்த அளவுக்கு மிக பெரிய அளவில் உள்ளனர் அதிலும் குறிப்பாக சிறுவர்கள் பெண்கள் அதோடு இவரின் படத்துக்கு தான் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கிறார்கள் என்று பல முறை திரையரங்க உரிமையாளர்கள் சொல்லி இருகிறார்கள்.

தொடர் வெற்றி நாயகன் வேறு இதுவரை வந்த எல்லா படங்களும் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்பது இல்லை குறிப்பாக பல பிரச்சனையில் இருந்த லிங்குசாமிக்கு துணையாக நின்றவர் என்றும் சொல்லலாம்

இப்போது இவர் செஉது இருக்கும் இக பெரிய சாதனை என்ன தெரியுமா தமிழ் சினிமாவில் இது வரை யாரும் செய்யாத ஒரு சாதனை ஏன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களால் கூட முடியாத சாதனையை இவர் செய்துள்ளார் .

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பலருக்கு கிடைக்காத பெருமை, ஏன், ரஜினிகாந்துக்கு கூட இது கிடைத்திருக்காது. அப்படி ஒரு பெருமை சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கிறது.

அது என்னவென்றால், சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமான ‘மெரினா’ முதல் விரைவில் வெளியாக உள்ள ‘வேலைக்காரன்’ வரை அவரது அனைத்துப் படங்களும் யு சான்றிதழ் பெற்ற படங்களாகும். பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும் பார்க்கும் படம் என்ற அங்கீகாரத்தை கொடுக்கும் யு சான்றிதழ், ஒரு ஹீரோ நடிப்பில் தொடர்ந்து வெளியான 10 படங்களுக்கும் கிடைத்திருப்பது பெரிய சாதனை தான். அதிலும், தற்போதைய சூழலில்.

Leave a Reply