Monday, April 27
Shadow

`விஸ்வாசம்’ படத்தின் இசையமைப்பாளர் இவர் தான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

`சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் `விஸ்வாசம்’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

‘வீரம்’, ‘வேதாளம்’,‘விவேகம்’ படங்களை தொடர்ந்து சிவா – அஜித் மீண்டும் இணைந்திருக்கும் படம் `விஸ்வாசம்’. அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது. இதில் இயக்குனர் சிவா, எடிட்டர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

இதுகுறித்து படத் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அதில் படத்தின் எடிட்டர் ருபன், ஒளிப்பதிவாளர் வெற்றி, இயக்குநர் சிவா உடன் யுவன் ஷங்கர் ராஜா பெயரையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. இதன்மூலம் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தான் என்பது உறுதியாகி இருக்கிறது. எனினும் படக்குழுவின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார். அஜித் ஜோடியாக நடிக்க அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply