Wednesday, October 28
Shadow

சிவகார்த்திகேயன் சமந்தா படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை கசிந்தது

சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் வளரும் முன்னை நடிகர் இல்லை வளர்ந்த நடிகர் காரணம் இன்று முன்னணி நடிகர்களை போல வியாபாரம் ரசிகர்கள் பட்டாளம் இவை அனைத்தும் இவருக்கும் சொந்தம் குறிப்பாக இளம் பெண்கள் கல்லூரி மாணவர்கள் இருந்து பள்ளி மாணவர்கள் வரை இன்று சிவகார்த்திகேயன் புராணம் தான் இவரின் வேலைக்காரன் மிகுந்த ஒரு எதிர்பார்ப்புடன் நாளை மறுதினம் வெளியாகிறது.

சிவா தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் நடித்து வருகிறார். இது பற்றி ஷூட்டிங் ஸ்போட் போட்டோக்கள் சமீபத்தில் வெளியானது.

அதனை தொடர்ந்து படத்திற்கு சீமத்துறை என டைட்டில் வைத்துள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. தற்போது படக்குழு இதை மறுத்துள்ளது.

படத்தின் ஷூட்டிங் தற்போது 70 % முடிந்துள்ளதாக கூறும் அவர்கள் டைட்டில் இன்னும் முடிவாகவில்லை. உறுதியானதும் விரைவில் அறிவிப்போம். இப்படம் குடும்பப்பாங்கான படம் என்று கூறியுள்ளது.

சிவாவின் பிறந்தநாளான ஃபிப்ரவரி 17 ல் இதன் ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்க்கலாம்.

Leave a Reply