
‘எனக்கு 20 உனக்கு18’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா.
ஜெயம் ரவியுடன் இவர் நடித்த ‘மழை’ படத்தின் மூலம் பிரபலம் ஆனார். ‘சிவாஜி’ படத்தில் ரஜினியின் ஜோடியாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனுஷ், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்தார். தெலுங்கிலும் அவரது மார்க்கெட்டை தக்கவைத்து வந்தார். தற்போது, தமிழில் ‘நரகாசுரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், ஸ்ரேயா இந்தோனேஷியா சென்றுள்ளார். அங்குள்ள பன்டா கடல் பகுதியில் கடலுக்குள் ‘டூபீஸ்’ நீச்சல் உடையில் கடல் கன்னி போல் நீந்தியதை புகைப்படமாக எடுத்து, அதை இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் வைரலாகிய நிலையில், தற்போது அரை நிர்வாண புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

ஸ்ரேயாவிற்கு படவாய்ப்புகள் அதிகமாக இல்லை. என்றாலும் தான் இளமையாக இருப்பதாக காட்டிக்கொள்வதற்காகவே ஸ்ரேயா இந்த படங்களை வெளியிட்டு வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
