
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யும், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நிலையில், அஜித் படத்தின் படப்பிடிப்பு இன்னமும் தொடங்கவில்லை.
அஜித் அடுத்ததாக `சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘வீரம்’, ‘வேதாளம்’,‘விவேகம்’ படங்களை தொடர்ந்து சிவா – அஜித் மீண்டும் இணைந்திருக்கும் புதிய படத்திற்கு `விஸ்வாசம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விவேகம் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் அஜித், சிவா, எடிட்டர் ரூபன், ஒளிப்பதிவாளர் வெற்றி மீண்டும் இணைந்திருக்கின்றனர்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில், அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார். அஜித் ஜோடியாக நடிக்க அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது.
விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
