Sunday, November 8
Shadow

’சீதக்காதி’யால் விஜய் சேதுபதிக்கு எழுந்த சோதனை!

விஜய் சேதுபதி நடிப்பில் வரும் வெள்ளி அன்று உலகம் முழுவது வெளியாகவிருக்கிறது

இப்படத்தினை தொடர்ந்து தற்போது 96, சூப்பர் டீலக்ஸ் மற்றும் சீதக்காதி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

சீதக்காதி படத்தினை பாலாஜி தரணிதரன் இயக்கி வருகிறார். பல்வேறு முன்னனி நாயகர்கள் கெளரவ வேடங்களில் நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த 16 ஆம் தேது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அனைத்து தரப்பு மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

கடந்த 300க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தமிழகத்தில் செத்தும் கொடுத்த சீதக்காதி என்ற சொல்வழக்கு புழக்கத்தில் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சீதக்காதி பெரும் வள்ளல், வணிகர், சேதுபதி மன்னரின் அமைச்சரவையும் அழங்கரித்ததோடு மட்டுமின்றி இந்து-இஸ்லாமிய சமய நல்லிணக்கத்திற்கும் பாடுபட்டவர். இதனால் ‘சீதக்காதி’ திரைப்படத்தின் தலைப்பு தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சேதுபதி-சீதக்காதி உறவின்முறை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அஜ்மல் தீன் கூறியதாவது:

”ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வணிகர் சேகு அப்துல் காதர் என்பவரின் பெயர்தான் சீதக்காதியாய் மருவியது. இலங்கை, சீனா, மலேயா, அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல் மூலமாக சீதக்காதி ஏற்றுமதி செய்ததற்கான ஆவணங்களை டச்சு மற்றும் ஆங்கிலேயர்கள் பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரத்தை ஆண்ட மன்னன் கிழவன் சேதுபதி, சீதக்காதிக்கு விஜயரகுநாத என்ற பட்டத்தையும், மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடற்கரைகளில் முத்து குளிப்பதற்கான வரி வசூலிக்கும் அதிகாரத்தையும் வழங்கியதோடு மட்டுமின்றி தனது ஆலோசகராகவும் பணியமர்த்திக் கொண்டார்.

சீதக்காதி, உமறுப் புலவர் சீறாப்புராணத்தை இயற்றுவதற்கும் நிதி அளித்தவர். கர்ணனைப் போல கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் சீதக்காதி என்று சைவப் புலவர் பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் பாடியுள்ளார்.

சீதக்காதி என்றால் தமிழகர்கள் அனைவருக்கும் நினைவிற்கு வருவது வள்ளல் சீதக்காதிதான். ‘சீதக்காதி’ திரைப்படம் மேடைக்கலைஞனின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் படமாக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தாலும் வள்ளல் சீதக்காதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாமல் காட்சிகளை அமைக்க வேண்டும்” என்றார் அஜ்மல் தீன்.

Leave a Reply