Tuesday, October 27
Shadow

சங்கரின் பாராட்டை பெற்ற பத்மாவத்

பாலிவுட்டில் ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘பத்மாவத்’. இதில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர், அதிதி ராவ் ஆகியோர் நடித்திருந்தனர். சஞ்சய் லீலா பன்சாலியே இசையமைத்திருந்த இதற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் – பன்சாலி புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. பல எதிர்ப்புகளை தாண்டி ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸான இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வரும் நிலையில், இயக்குனர் சங்கர், படத்தை பார்த்து அமேஷிங் விஷுவல், பெண்டாஸ்டிக் ஒர்க், பாடல்கள் சிறப்பாக உள்ளது என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

Leave a Reply