Tuesday, October 27
Shadow

“யம்மாடீ… என்ன முத்தம்யா இது..?” பிரியா வாரியரின் அசரவைக்கும் அடுத்த வீடியோ! உள்ளே

‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தின் ‘மாணிக்ய மலராய பூவி’ பாடல் சமீபத்தில் வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகி வருகிறார். பிரியா பிரகாஷ் வாரியரின் அசத்தல் ரியாக்‌ஷன் இடம்பெற்ற பாடலின் வீடியோ யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், பிரியா பிரகாஷ் வாரியரின் அசத்தலான ரியாக்‌ஷனுடன் ‘ஒரு அடார் லவ்’ படத்தின் அடுத்த டீசர் காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டிருக்கிறது.

‘ஜிமிக்கி’ கம்மல் ஷெரிலுக்கு பிறகு ‘ஒரு அடார் லவ்’ படத்தின் நாயகிகளில் ஒருவரான பிரியா பிரகாஷ் வாரியர் சென்சேஷன் நாயகி லிஸ்டில் வந்துவிட்டார். யார் இந்த பிரியா என்று பலரும் தற்போது தேட, கூகுள் தேடல் பட்டியலில் இந்திய அளவில் டாப் ஆகிவிட்டார் பிரியா.

‘மாணிக்ய மலராய பூவி’ பாடலின் வீடியோ மூலம் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரியா வாரியர். இந்தப் பாடலில் கண்களால் பிரியா வாரியர் காட்டிய எக்ஸ்பிரஷன் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

பிரியா வாரியர் ரியாக்‌ஷன்ஸ் சமூக வலைதளமெங்கும் செம வைரல் ஆனதைத் தொடர்ந்து இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனார் பிரியா பிரகாஷ் வாரியர். தமிழ் மற்றும் மலையாள திரையுலக ரசிகர்களுக்கு மட்டும் தெரிந்திருந்த பெயர் இந்திய அளவில் ட்ரெண்டானதால் யார் இவர் எனத் தேட ஆரம்பித்துவிட்டனர்.