Tuesday, April 21
Shadow

அடுத்தடுத்து கிசுகிசுக்கப்படும் காஜல் அகர்வால் – இப்போ இவரா?

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர்கள் அவசரம் காட்டுவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் காஜல் அகர்வால் – நடிகர் ராணா இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ‘நீனே ராஜு நீனே மந்திரி’ என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தங்களுக்குள் காதல் இல்லை என்று இருவரும் மறுத்தனர். பின்னர் தெலுங்கு இளம் நடிகர் ஒருவருடனும் காஜல் அகர்வால் இணைத்து பேசப்பட்டார்.

தற்போது காஜல் அகர்வாலுக்கும், மும்பை தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் வந்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. அவரை காஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், அதனை காதல் அகர்வால் மறுத்துள்ளார்.