Friday, January 17
Shadow

சூர்யா படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட செல்வராகவன்

`தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தில் ரகுல் பிரீத்திசிங், சாய் பல்லவி நாயகிகளாக நடிக்கிறார்கள்.

த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தஞ்சாவூர் பகுதிகளில் நடந்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட செட் ஒன்றும் அமைக்கப்படுகிறது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற மார்ச் 5-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.