Monday, May 25
Shadow

இயக்குனர் விக்னெஷ் சிவனுக்கு கார் பரிசு கொடுத்த சூர்யா கோவதில் கோலிவுட்

சூர்யா நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும், கார்த்திக், செந்தில், தம்பிராமையா, ஆர்ஜே பாலாஜி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சூப்பர் ஹிட் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் சூர்யா சிறப்பு பரிசு ஒன்றை அளித்திருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை அழைத்து சிகப்பு வண்ண டொயோட்டா கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார்.

இது ஒருபக்கம் இருக்க ஆனால் கோலிவுட் வட்டாரம் இந்த படம் என்ன வெற்றி படமா என்று வினியொகிஸ்தர்கள் கேள்வி எழுப்பி உள்ள்னர்.