
இந்தியாவிலே தமிழ் சினிமா தான் மிகவும் பிரபலம் காரணம் தரமான கதை அதிக வியாபாரம் சிறந்த தொழில்நுட்பம் இப்படி அனைத்திலும் சிறந்து விளங்கிய சினிமா துறை கடந்த ஒன்டரைமாதங்கலாக வேலை நிறுத்தம் பேரில் முடங்கி கிடக்கிறது இதனால் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சினிமாவை நம்பி உள்ள தொழிலார்களும் பாதிக்க பட்டுள்ளனர் இந்த வேலை நிறுத்தம் எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்புக்கு ஒரு விடை கிடைக்கும் அளவில் உள்ளது என்று தான் சொல்லணும் .
அவ்வப்போதுதான் சென்னைக்கு மழை என்றாலும் எப்போதாவது வெளுத்து வாங்கி விடும். ஊரை ஒரு வழி பண்ணாமல் போகாது. அது மாதிரிதான் தமிழ்சினிமாவில் சில்லறை சண்டைகள் நடக்கும். ஒருநாள் பெரிதாக வெடித்து விடும்.ஆனால் ஒட்டு மொத்த திரை உலகமே இப்படி தனுஷ்கோடி மாதிரி ஆகும் என எதிர்பார்க்கவில்லை.தியேட்டரையும் மூடிட்டாங்க.
“மூடவில்லை” என்று சிலர் பம்மாத்துப் பண்ணினாலும் ஆடியன்ஸ் என்கிற இனம் பத்துப் பேர் தேறினாலே அபூர்வம் என்றாகி விட்டது. இந்த நிலையில் தான் சந்தோஷமான ஒரு சேதி!
தயாரிப்பாளர் சங்கத்தின் சொந்த மாஸ்டரிங் வசதியுடன் dc 1,2k,4k, புரோஜடர்கள் ,மற்றும் சர்வர்கள், வழங்குவதற்கு ஒரு நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.’டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர் மைக்ரோ பிளக்ஸ் ‘ என்கிற அந்த நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இதன் மூலம் எல்லா படங்களும் மாஸ்டரிங் செய்யப்பட்டு சங்கம் கொடுத்து விடும்.”
