
தமிழ் சினிமாவில் தான் பல நடிகைகள் ஜொலித்து பிறகு தெலுங்கு மலையாளம் என்று போவார்கள் ஆனால் மலையாளத்தில் அறிமுகமாகி தமிழில் முதல் படம் நடிக்கும் சாய் பல்லவியின் ஆட்டம் கொஞ்சம் அதிகம் என்று தான் சொல்லனும் இவர் நடித்த முதல் மலையாள படம் வெற்றி என்பதால் இவர் தானுலகிலே மிக சிறந்த நடிகை என்ற ஒரு நினைப்பு என்று கூடசொல்லலாம் .
பிரேமம் படம் மூலம் பிரபலமான சாய் பல்லவி ஏ.எல். விஜய்யின் கரு படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாகியுள்ளார். அவர் தனுஷின் மாரி 2, சூர்யாவின் என்.ஜி.கே. ஆகிய படங்களில் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் படத்தில் சாய் பல்லவி நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் டேட்ஸ் பிரச்சனையால் நடிக்கவில்லையாம். திரையுலகில் வித்தியாசமான நடிகையாக உள்ளார் சாய் பல்லவி. சக நடிகைகள் யாரையும் தனக்கு போட்டியாக அவர் நினைக்கவில்லையாம். தன்னுடைய பிளஸ், மைனஸ் மற்றும் லிமிட் தனக்கு நன்றாக தெரியும் என்கிறார் சாய் பல்லவி. தன்னை தேடி வரும் கதாபாத்திரங்களை எல்லாம் ஏற்காமல் தனக்கு எது பொருந்துமோ அதில் மட்டும் தான் நடிக்கிறாராம். கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.
