
சென்னை : 14/4/2018 தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் நாள் ( April 14th ) அன்று திருமதி என்கிற ஒரு குறும்படக்குழு தன் குறும்படம் முன்னோட்டத்தை வெளியிட சென்னையை நோக்கி வந்தார்கள்.
அக்குறும்படம் முன்னோட்டத்தை தமிழ் பத்திரிகையாளர்,சமூக ஆய்வாளர், சமூக பேச்சாளர், தமிழ் சினிமாவில் பல பாடல்கள் எழுதியிருக்கும் இன்னும் எழுத இருக்கும் திரு.முருகன் மந்திரம் அவர்க்ள் மதியம் 12 மணி அளவில் குறும்பட இயக்குனர் பிரகதீஷ், வசனகர்த்தா தினேஷ், மற்றும் சமூக விமர்சனர் கிருஷ்ணன் புத்திரன் உடன் வெளியிட்டார். அதன் பின்பு சிறிது நேரம் குறும்பட இயக்குனரிடம் அக்குறும்படம் பற்றியும், தமிழ் சினிமா பற்றியும் பேசினார்.அந்த உரையாடலில் அவர் கேட்ட கேள்வியும், இயக்குனர் சொன்ன பதிலும் அவருக்கு சிறிது அதிர்ச்சியும், பெறும் மகிழ்ச்சியும் இருந்தது.

அது என்னவென்றால் முருகன் மந்திரம் அவர்கள் “இக்குறும்படத்தை எங்கு எடுத்தாய் ” என்று கேர்க்க, இயக்குனர் ” குறும்படம் முழுவதும் தஞ்சாவூரில் எடுத்து முடித்தேன் ” என்று சொன்னார். முருகன் மந்திரம் சிறிது அதிர்ச்சியில் ” சென்னை தொடர்பு இல்லாமல் முழுவதுமாக தஞ்சையில் எடுத்து இருக்கிறாய் ” என்று சொன்னார் பின்பு சிரித்தப்படி ” இனி வரும் காலத்தில் சினிமா சென்னையை மட்டும் நம்பி இருக்காது என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் “.
அதன் பின்பு இயக்குனரிடம் தமிழ் சினிமா பற்றியும், இயக்குனர்களின் கஷ்டங்கள் பற்றியும் சொன்னார். அவர் சொன்ன கருத்தில் மிகவும் பிடித்தது ” தமிழ் சினிமாவில் சுலபமாக ஜெயி்க்க முடியாது, அவ்வளவு சீக்கிரம் லாபமும் கிடைக்காது ஆனால் நீ உண்மையாக சினிமாக்காக இருந்தால் சினிமா உன்னை கைவிடாது என்று சொல்லி இயக்குனரை பார்த்து
நம்பிக்கையோடு சென்னைக்கு வா…சினிமாக்கு வா…என்று சொல்லி வழி அனுப்பி வைத்தார்.
