சென்னை : April 16
கேப்டன் விஜய்காந்த் தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் அவர் மையில் கல்லாக இருக்கிறார் என்பது எவ்வித ஆச்சிரியமும் இல்லை.அவர் தமிழ் சினிமாக்கு வந்து 40 வருடங்கள் கடந்து விட்டது. அவரை பெருமை படுத்தும் விதமாக சினிமா நடிகர்களை அழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினர். அதில் கலந்து கொண்ட சரத்குமார் சிலரை விமர்சி்த்து பேசினார். அவர் பேசினது.இதோ!!!
தமிழ் சினிமாவில் 40 வருடங்களை கடந்த கேப்டன் விஜய்காந்த்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் திருமதி என்னுடைய வணக்கம். தமிழ் மக்களே நீங்கள் தப்பானவர்களுக்கும், தமிழ் நாட்டை காப்பாத்த தெரியாதவர்களுக்கும் நீங்கள் தேர்வு செய்கிறீர்கள். உங்களுக்கு ஒரு பிரச்சனைனா முன் வந்து நிற்ப்பது விஜய்காந்த், சரத்குமார், சத்யராஜ் தான் வேற யாருமில்லை மத்தவங்க எல்லாரும் ஓடி போவார்கள்.
இப்போது சில பேர் நல்லவன் போல் நடிக்கிறார்கள். மக்களே முதலில் யார் தமிழன்,தமிழுக்கு போராடுபவன் என்று நினைத்து பாருங்கள் மற்றும் மீமிஸ் கிரியேட்டருக்கு ஒன்று சொல்லிக்க விரும்புகிறேன். நீங்கள் விஜய்காந்த்தை காமெடியாக மீமிஸ் போடுகிறிர்கள். அவரை பத்தி உங்களுக்கு என்ன தெரியும். அவர் எப்படி பட்டவருனு எங்களுக்கு தான் தெரியும்.
என் வீட்டில் இவரை பற்றி மீமிஸ் காமித்தாங்னா நான் பார்க்க மாட்டேன் எனென்றால் இவரை பற்றி எனக்கு தெரியும். இது போல நல்லவரை நீங்கள் கேலி செய்தால் நீங்கள் கேவலமானவர்கள். இவ்வாறு கூறினார்