Tuesday, April 28
Shadow

பிக் பாஸ்-2 போட்டியாளர்கள் விவரம் – லீக்கான ரகசியத் தகவல்.!

உலக தமிழர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் எப்ப யார் எல்லாம் கலந்துகொள்ளபோகிரார்கள் என்ற எதிர்பார்ப்புதான்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

அதற்கான டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது, மேலும் மற்றொரு டீசர் உருவாகி வருவதாகவும் தகவல்கள் கிடைத்து இருந்தன.

இந்நிலையில் தற்போது இந்த சீசனில் கலந்து கொள்ள போகும் பிரபலங்கள் என ஒரு சிலரின் பெயர்கள் வெளியாகி உள்ளன. ஓவியா இந்த சீசனில் பங்கேற்க உள்ளதாகவும் ஆனால் அவர் சிறப்பு விருந்தினராக மட்டுமே பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் நடிகை சிம்ரன், சினேகா மற்றும் கஸ்துரி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களுடன் முன்னணி காமெடி நடிகர் ஒருவர் கலந்து கொள்ளலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.