Wednesday, October 28
Shadow

இயக்குனர் கார்த்திக் நரேனை ஹாலிவுட் இயக்குனருடன் ஒப்பிட்ட அரவிந்த்சாமி

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் தான் முதல் படத்தில் தன்னை மிக சிறந்த இயக்குனர் என்று நிரூபிப்பார்கள் அந்த வகையில் தனது முதல் படமான துருவங்கள் பதினாறு படம் மூலம் மிக பெரிய பேர் எடுத்தவர் என்றால் அது கார்த்திக் நரேன்

துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் தற்போது இயக்கியுள்ள படம் நரகாசூரன். ரிலீசுக்கு தயாராகிவிட்ட இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப்கிஷன், ஆத்மிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேனை ஹாலிவுட்டில் தி சிக்ஸ்த் சென்ஸ், ஸ்பிலிட் போன்ற படங்களை இயக்கிய நைட் ஷையமாலன் என்பவருடன் ஒப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் அரவிந்த்சாமி.

அதாவது, கார்த்திக் நரேன் கதையும், திரைக்கதை அமைக்கும் விதம், நைட் ஷையமாலனைப்போலவே உள்ளது என்று கூறியுள்ளார் அரவிந்த்சாமி