Wednesday, October 28
Shadow

நடிகர் சத்தியராஜ்ஜின் உறவினர் நடிகர் சத்யன் பிறந்த நாள்

தமிழ்த் திரைப்பட நடிகரான சத்யன், நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படத் தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவக்குமாரின் ஒரே மகனாவார். திரைப்பட நடிகர் சத்தியராஜ் இவரின் மாமா ஆவார்.

அவரை பற்றி அவரே சொன்னது….

நீங்கள் நடித்ததில் உங்களுக்குப் பிடித்த படம்…?

எனக்கு மட்டுமில்லை, என்னுடைய மனைவிக்கும் பிடித்த படம், நண்பன்.

அதேபோன்ற படங்கள் பிறகு அமையவில்லையே?

அதனால்தான் அது இன்னும் எனக்குப் பிடித்த படமாக இருக்கிறது. ஆனாலும், துப்பாக்கி போன்ற படங்களில் எனக்கு நல்ல வேடம் கிடைத்தது.

உங்களை இப்போதெல்லாம் அதிகமாக படங்களில் பார்க்க முடியவதில்லையே?

நான் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பெரிய படங்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.

ஏன் இப்படியொரு திடீர் நிலைப்பாடு…?

சமீபகாலமாக சிறிய படங்களில் நடித்தால் அதில் பல படங்கள் திரைக்கே வருவது இல்லை. இதனால் எனது உழைப்பு வீணாகி விடுகிறது. எனவே தான் சிறிய படங்களை நான் ஏற்க இயலவில்லை.

அதாவது நிறைய சின்ன படங்களில் நடித்திருக்கிறீர்கள்…?

ஆமா. அகராதி, இருவர் உள்ளம், களவாடிய பொழுதுகள், மச்சான், காவியன்…

இப்போது என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?

விஜய்யின் 61 -வது படத்திலும் நடிக்கிறேன்.

விஜய் படத்தில் என்ன மாதிரியான வேடம்?

விஜய்யின் நண்பனாக நடிக்கிறேன்.

வேறு படங்கள்…?

இப்போதைக்கு விஜய், சூர்யா படங்களில் மட்டும்தான் நடித்து வருகிறேன். இது போன்ற பெரிய நடிகர்கள், பெரிய டைரக்டர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

நடித்த திரைப்படங்கள்

துப்பாக்கி
சிவா மனசுல சக்தி
ஆதவன்
நண்பன்
ராஜா ராணி
தீராத விளையாட்டு பிள்ளை
மாயாவி
ஒன்பதில குரு
நவீன சரசுவதி சபதம்
இளையவன்
அருள்
கண்ணா உன்னை தேடுகிறேன்
ஆதவன்