Wednesday, April 22
Shadow

புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் கானா பாலா பிறந்த தினம்

கானா பாடல்கள் என்ற இசைவகையில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார். அட்டகத்தியில் ‘ஆடி போனா ஆவணி’, ‘நடுக்கடலுல கப்பல’ பாடல்கள் மூலம் பிரபலமானார். இசையமைப்பாளர் தேவாவிற்குப் பின்னதாக கானா பாடல்களை தமிழ் திரைப்படத்துறையில் மீள்வரவு செய்வதில் இவருக்கு முதன்மை இடம் உள்ளது. தமது சில கானா பாடல்களுக்கு இவரே பாடல் வரிகளையும் இயற்றி உள்ளார்.

இவர் பாடிய திரைப்படபாடல்கள்

ஸ்ரீகாந்த் தேவா இசையில் “பிறகு” படத்தில் “பதினொரு பேரு ஆட்டம்”, “உன்னைப்போல பெண்ணை” பாடல், ஜெயராம் புஷ்பராஜ் இசையில் “:தொடக்கம்” படத்தில் “போனப் போட்டு” பாடல், ஸ்ரீகாந்த் தேவா இசையில் “வேதா” படத்தில் “சிக்கு புக்கு ரயிலு” பாடல், சந்தோஷ் நாராயணன் இசையில் அட்டைக்கத்தி படத்தில் “ஆடி போனா ஆவணி” மற்றும் “நடுக்கடலுல கப்பல” பாடல்கள், நாராயணன் இசையில் பீட்சா படத்தில் நெனைக்குதே” பாடல், எஸ்.தமன் இசையில் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தில் “டுயட் சாங்” மற்றும் போட்டியின்னு வந்துப்புட்டா” பாடல், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் “பரதேசி’ படத்தில், “தன்னைத் தானே” பாடல், “உதயம் என்.எச்.4” படத்தில் “ஓரக்கண்ணால” பாடல், “ராஜா ராணி” படத்தில் “ஏய் பேபி” பாடல், எஸ்.தமன் இசையில், “சேட்டை” படத்தில் “எதத்தான் கண்டுட்டே நீ புதுசா” பாடல், கவுரவம் படத்தில் “மண்ணடிச்ச பந்து” மற்றும் “ஒரு கிராமம்” பாடல், பட்டத்து யானை படத்தில் “பூசணிக்காய்” பாடல், சந்தோஷ் நாராயணன் இசையில், சூது கவ்வும் படத்தில் “காசு பணம் துட்டு” பாடல், ஸ்ரீகாந்த் தேவா இசையில், ஆர்யா சூர்யா படத்தில் “அய்யோ ராமரே” பாடல், சித்தார்த் விபின் இசையில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் “என் வீட்டிலே” பாடல், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் நண்பேன்டா படத்தில் “டப்பாங்குத்து மெட்டில” பாடல்

இவர் பாடலாசிரியராக பணியாற்றிய படங்கள்

கண்ணா லட்டு தின்ன ஆசையா, சேட்டை, உதயம் என்.எச்4, சூது கவ்வும், ஆர்யா சூர்யா, ராஜா ராணி, கிரிக்கெட் ஸ்கேண்டல், நவீன சரஸ்வதி சபதம், வாராயோ வெண்ணிலாவே, உயிருக்கு உயிராக, ஒரு கன்னியும் மூணு களவாணியும்