Wednesday, April 22
Shadow

தளபதி விஜய் பிறந்த தினம் அவரை பற்றி அறியாத பல விஷயங்கள்

விஜய் தமிழ் சினிமாவின் வெற்றியின் தாரக மந்திரம் தயாரிப்பளர்களின் வள்ளல் பலகோடி தமிழ் மக்களின் முதல்வன் மன்னின்மைந்தன் மக்களின் முதல்வன் இளைய தளபதியாக இருந்தவர் இன்று தளபதியாக வாழ்கிறார் ஏழை மக்களின் நண்பன் ரசிகர்களின் அண்ணன் இவர் சிரிப்பில் மயங்கி கிடக்கும் பல கோடி தங்கைகள் மொத்தத்தில் ரசிகர்களின் இதய தெய்வம் இப்படி தான் இவரின் புகழ் உலகில் வாழும் பல கோடி தமிழர்கள் நினைக்கிறார்கள்.

இவரது இயற்பெயர் ஜோசப் விஜய் ஆகும். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை ” தளபதி” என்று அழைக்கிறார்கள்.

நடிகர் விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

விஜய்க்காக தளபதி ஆன்தம் என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். எங்கேயும் எப்போதும் படத்தில் பேருந்து காட்சிகளில், கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்.

2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. 2017 ஆண்டு மெர்சல் படத்தின் மூலம் பிழையான GST வரி விபரங்களை கூறியதாக, அரசியல் வட்டாரங்களில் மிகவும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.

இவர் நடித்த படங்கள்

மெர்சல், பைரவா, தெறி, புலி, கத்தி, ஜில்லா, தலைவா, ரவுடி ரதோர், துப்பாக்கி, நண்பன், வேலாயுதம், காவலன், சுறா, வேட்டைக்காரன், வில்லு, பந்தயம், குருவி, அழகிய தமிழ் மகன், போக்கிரி, ஆதி, சிவகாசி, சுக்ரன், சச்சின், திருப்பாச்சி, மதுர, கில்லி, உதயா, திருமலை, புதிய கீதை, வசீகரா, பகவதி, யூத், தமிழன், ஷாஜகான், பத்ரி, பிரெண்ட்ஸ், பிரியமானவளே, குஷி, கண்ணுக்குள் நிலவு, மின்சாரக் கண்ணா, நெஞ்சினிலே, என்றென்றும் காதல், துள்ளாத மனமும் துள்ளும், நிலாவே வா, பிரியமுடன், நினைத்தேன் வந்தாய், காதலுக்கு மரியாதை, நேருக்கு நேர், ஒன்ஸ்மோர், லவ் டுடே, காலமெல்லாம், காத்திருப்பேன், செல்வா, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல், பூவே உனக்காக, கோயம்புத்தூர் மாப்ளே, சந்திரலேகா, விஷ்ணு, ராஜாவின் பார்வையிலே, தேவா, ரசிகன், செந்தூரப் பாண்டி’, நாளைய தீர்ப்பு, சட்டம் ஒரு விளையாட்டு, நான் சிவப்பு மனிதன், வெற்றி

இவர் பாடிய பாடல் இடம் பெற்ற படங்கள்

தெறி படத்தில் செல்ல குட்டி பாடல், புலி படத்தில் ஏன்டி ஏன்டி பாடல், கத்தி படத்தில் லெட்ஸ் டெக் ய செல்ஃபி புல்ல பாடல், ஜில்லா படத்தில் கண்டாங்கி கண்டாங்கி பாடல், தலைவா படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல், துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடல், சச்சின் படத்தில் வாடி வாடி பாடல், பகவதி படத்தில் கொக்கா கோலா, தமிழன் படத்தில் உள்ளத்தைக் கிள்ளாதே பாடல், பத்ரி படத்தில் என்னோட லைலா பாடல், பிரியமானவளே படத்தில் மிசிச்சிப்பி நதி குலுங்க பாடல், கண்ணுக்குள் நிலவு படத்தில் சின்னஞ்சிறு பாடல் மற்றும் இரவு பகலை பாடல், நெஞ்சினிலே படத்தில் தங்கநிறத்துக்கு பாடல், துள்ளித்திரிந்த காலம் படத்தில் டிக் டிக் டிக் பாடல், பெரியண்ணா படத்தில் ரோட்டுல ஒரு பாடல் மற்றும் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து பாடல், வேலை படத்தில் காலத்துக்கு ஒரு கனா பாடல், நிலாவே வா படத்தில் சந்திர மண்டலத்தை பாடல் மற்றும் நிலவே.. நிலவே பாடல், ப்ரியமுடன் படத்தில் மௌரிய மௌரிய பாடல், காதலுக்கு மரியாதை படத்தில் ஓஹ பேபி பேபி மற்றும் என்னை தாலாட்ட வருவாளா பாடல், ஒன்ஸ் மோர் படத்தில் ஊர்மிளா ஊர்மிளா பாடல், செல்வா படத்தில் சிக்கன் கரே பாடல், காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தில் அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி பாடல், மாண்புமிகு மாணவன் படத்தில் திருப்பதி போனா மொட்ட பாடல், கோயம்புத்தூர் மாப்ளே படத்தில் பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி பாடல், விஷ்ணு படத்தில் தொட்டபெட்டா பாடல், தேவா படத்தில் அய்யய்யா அலமேலு ஆவின் பசும்பாலு பாடல், கோத்தகிரி குப்பம்மா

இவர் பெற்ற விருதுகள்

கில்லி (2004)- சென்னை கார்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது
கில்லி (2004)- தினகரன் சிறந்த நடிகர் விருது
கில்லி (2004)- பிலிம் டுடே சிறந்த நடிகர் விருது
பொதுச்சேவை அறிவிப்பு (2005)-க்கு வெள்ளி விருது
போக்கிரி (2007)- தமிழின் சிறந்த நடிகருக்கான அம்ரிதா மாத்ருபூமி விருது
போக்கிரி (2007)- சிறந்த நடிகருக்கான இசை அருவி தமிழ் இசை விருது
வேட்டைக்காரன்(2009)- சிறந்த நடிகருக்கான இசைஅருவி தமிழ் இசை விருது
துப்பாக்கி, நண்பன்(2012) – விகடன் சிறந்த நடிகர் விருது