
2006 ஆம் ஆண்டில் போர்பஸ் பத்திரிக்கையானது அவரை உலகின் மிகுந்த செல்வாக்குள்ள பிரபலங்களில் ஒருவராக வரிசைப்படுத்தியிருந்தது. அவர் அகாடெமி விருதுகளுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் கோல்டன் குளோப் விருதுகளை மூன்று முறை வென்றிருக்கின்றார். நடிகருக்கான “தலைமுறை காவிய எக்ஸ் (Generation X) படமாகவும் வாழ்க்கைப் பணி உருவாக்கிய” படமென்றும் விவரிக்கப்பட்ட, 1983 ஆம் ஆண்டில் வெளிவந்த ரிஸ்கி பிசினஸ் (Risky Business) திரைப்படத்தில் அவரது முதல் முதன்மைக் கதாபாத்திரம் அமைந்தது. 1986 ஆம் ஆண்டில் வெளிவந்து மிகவும் பிரபலமாகி வசூல் ரீதியாக வெற்றியடைந்த டாப் கன் (Top Gun) திரைப்படத்தில் கப்பல் மாலுமி கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்தார்.

அதன் பின்னர் குரூஸ் தொடர்ந்து அது போன்ற வேடங்களிலேயே தொடர்ந்து நடித்தார். அவர் 1990கள் மற்றும் 2000களில் வெளிவந்த அதிரடிப்படங்களான மிஷன்: இம்பாசிபிள் (Mission: Impossible) தொடர் வரிசையில் உளவாளிப் பாத்திரத்தில் தொடர்ந்து நடித்தார். மேலும் இந்த மாதிரியான கதாநாயகன் பாத்திரங்களில் அவர், மாக்னோலியா (Magnolia) (1999) திரைப்படத்தில் பெண்களை வெறுக்கும் ஆண் தலைவன் மற்றும் மைக்கேல் மேன்னின் க்ரைம் திரில்லர் திரைப்படமான கொல்லட்டெரல் (2004) (Collateral) படத்தில் அமைதியாகவும் கணிப்புத்திறன் சமூக வெறுப்புக் கொண்ட கொலைகாரன் போன்ற இதர பிற வேடங்களிலும் நடித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டில் எட்வர்டு ஜே எப்ஸ்டெயின் என்ற ஹாலிவுட் பத்திரிகையாளர், பில்லியன் டாலரில் எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு வெற்றி தேடித்தரக்கூடிய சில தயாரிப்பாளர்களில் ஒருவராக குரூஸ் உள்ளார் (ஜார்ஜ் லூகஸ், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஜெர்ரி ப்ரூக்ஹேய்மர் ஆகியோர் அந்தத் தயாரிப்பாளர்களில் பட்டியலிலுள்ள மற்றவர்கள் ஆவர்). 2005 ஆம் ஆண்டிலிருந்து, குரூஸ் மற்றும் பௌலா வாக்னெர் ஆகியோர் யுனைட்டேட் ஆர்ட்டிஸ்ட்ஸ் திரைப்பட ஸ்டுடியோவிற்கு பொறுப்பேற்றனர். அதில் குரூஸ் தயாரிப்பாளர் மற்றும் நடிகராகவும் வாக்னெர் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயல்பட்டனர். சர்ச் ஆப் செயிண்டாலஜிக்கு குரூஸ்சின் சர்ச்சைக்குரிய ஆதரவும் பின்பற்றுதலும் நன்கு அறியப்பட்டது
