Tuesday, October 27
Shadow

ராதா ரவியின் பேச்சால் விஜய் ரசிகர்கள் அப்செட்.!

ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் ராதாரவி தளபதி விஜயுடன் இணைந்துள்ளார். கொடுத்த வாய்ப்பை பயணப்படுத்தி கொள்ளாமல் எப்படி பேசி இருக்கிறார் .

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாராக வலம் வருபவர் தளபதி விஜய். எப்போதும் அமைதியான மனிதன் என்றே பலரும் சொல்லி கேள்வி பட்டிருக்கிறோம். இவர் தற்போது நடித்து வரும் சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார் ராதா ரவி.

இவர் அளித்து வரும் அனைத்து பேட்டிகளிலும் தளபதி விஜயை பற்றி பேசி வருகிறார். அப்படி பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சொன்ன விசியம் தற்போது இணையத்தில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.

நாளைய தீர்ப்பு படத்தில் நான் தான் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தேன். என் மனைவியாக ஸ்ரீ வித்யா நடித்திருந்தார். நான் வேறொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருப்பேன், அது விஜய்க்கு தெரிந்து போக அவர் என்னுடைய சண்டை பிடித்து ஆவேசமாக பேச வேண்டும்.

இந்த காட்சி படமாக்கப்பட்ட போது விஜய்க்கு நடிக்க வரவில்லை. என் மீது கை வைக்க தயங்கினார். அவ்வளவு பெரியவர் அவர் மேல எப்படி கை வச்சு நடிக்கறது என கூறினார். அப்போது நான் விஜிமா நீ பயப்படாத தைரியமா நடி என கூறினேன்.

அதுமட்டுமில்லாமல் ஒரு உதாரணம் சொல்றேன் உங்க அப்பா வேறொரு பெண்ணோடு தொடர்பு வச்சிருந்தா உனக்கு எப்படி கோவம் வருமோ அதே போல நினைத்து நடி என கூறியதாக அந்த பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து விஜய் ரசிகர்கள் யோவ் என்னதான் உதாரணமாக இருந்தாலும் இப்படியா சொல்வீங்க என கூறி வருகின்றனர்.