Wednesday, October 28
Shadow

பாடகர் உன்னிமேனன் பிறந்த தினம் பதிவு இவரை பற்றிய சில வரிகள்

இவர் 500க்கும் மேலான திரைப்பாடல்களை தமிழ், மலையாளம்,தெலுங்கு மொழிகளில் பாடியுள்ளார். துவக்கத்தில் நன்கு அறியப்படாத பாடகராக இருந்து வந்த உன்னிமேனனுக்கு 1992ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜாத் திரைப்படத்தில் அவர் பாடிய “புது வெள்ளை மழை” என்ற பாடல் திருப்புமுனையாக அமைந்தது. ஏ.ஆர்.ரகுமானின் பல படங்களில் பாடியுள்ளார்.

உன்னி மேனன் ஆகஸ்ட் 12,1957 அன்று கோவில் நகரமான குருவாயூரில் வி.கே.எஸ்.மேனன் மற்றும் மாலதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.குருவாயூரிலும் பாலக்காட்டிலும் கல்வி கற்று பாலக்காட்டின் அரசு விக்டோரியா கல்லூரியில் இயல்பியலில் பட்டம் பெற்றார்.இளமையில் இசையில் பெருநாட்டம் காட்டிய உன்னிமேனன் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போதே பல இசைப்போட்டிகளில் விருதுகள் வென்றுள்ளார்.