
இவர் தமிழ் சினிமாவில் காமடி வேடங்களில் நடித்து வருகிறார். முதன் முதலில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து லொள்ளு நிகழ்ச்சியில் நடித்தார்.
இவருடன் லொள்ளு சபா நடித்த சந்தானம், சாமிநாதன், ஜீவா மற்றும் பாலாஜி, யோகி பாபு, மதுமிதா ஆகியோர் நடிகர்களாகி தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். தனது பாடி லாங்குவேஜ் காரணமாகவே மனோகர் புகழ் பெற்றார்.
கடந்த 2017ம் ஆண்டு ஜல்லிகட்டு தடை கோரிய பீட்டா அமைப்பு எதிராக இவர் போராடினார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
காதல் எப்எம், மலை மலை, ஈசா, வாடா, மஞ்சா வேலு, அலெக்ஸ் பாண்டியன், கன்னா லட்டு தின்ன ஆசையா, என்றென்றும் புன்னகை, சிகரம் தொடு’, என்னமோ ஏதோ, பட்டைய கிளப்பு பாண்டியா, நண்பேண்’டா, திரிசா இல்லேனா நயன்தாரா, இனிமே இப்படிதான், மனிதன், பயம் ஒரு பயணம், தில்லுக்கு துட்டு, தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும், கடலை, மணல் கயிறு 2, அன்பானவன் அடங்காதவன் அசராதவ்ன், ஆங்கில படம், கத்தாடி, மதகஜா ராஜா
