Thursday, April 30
Shadow

402 திரைகளில் கோலமாவு கோகிலா= அதிகாலை காட்சி = வரலாறு. காணாத சாதனை.

பொதுவாகவே ரசிகர்களிடம் பேராதரவு பெற்ற மாஸ் கதாநாயகர்களுக்கு மட்டுமே ரிலீஸ் தேதி அன்று அதிகாலை காட்சிகள் மற்றும் சிறப்பு காட்சிகள் இருக்கும். அந்த மரபை மீறி முதல் முறையாக ஒரு கதாநாயகி முக்கியத்துவம் உள்ள படம் அதிகாலை மற்றும் சிறப்பு காட்சிகள் பெறுகின்றதென்றால் அந்த பெருமை நயன்தாராவுக்கு மட்டுமே. லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிக்க , நெல்சன் இயக்கத்தில் ,அனிருத் இசை அமைப்பில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் “கோலமாவு கோகிலா” ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.அந்த எதிர்பார்ப்பு தமிழகமெங்கும் எதிரொலிக்கிறது. 402 காட்சிகள் , ஏராளமான சிறப்பு காட்சிகள் என்று இப்படம் நாளை உலகெங்கும் வெளி ஆகிறது