
நயன்தாரா, நம்பர் ஒன் பெண் நடிகை என்ற பெயரை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார். ரசிகர்களால லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்படும் இவர், தமிழ் சினிமாவில் எந்த ஒரு ஹீரோயினும் செய்த ஒன்றை, அதாவது தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறந்த நடிகையாக இருந்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ள இவர், இறுதியாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள இந்தியன் 2-வில் நடித்து வருகிறார்.
பெண்களை முன்னிலை படுத்து வரும் படங்களை தொடர்ந்து நடித்து வரும் இவருக்கு, சமீபத்தில் நடித்த மாயா படம் பெரிய வரவேற்பபை அளித்து. தொடர்ந்து நானும் ரவுடி தான் படத்தில் நடித்தார். இந்த படம் இவருடன் நடித்த விஜய்சேதுபதிக்கு கமர்சியல் ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது.

நயன்தாராவின் வெற்றி ரகசியமே, இளைய தலைமுறை இயக்குனர்களுடன் பணியாற்றி வருவது தான். இவர்களது புதிய ஐடியாக்கள், இவரது நடிப்பை வெளிபடுத்தும் கேரக்டர்களும் வெற்றிக்கு காரணமாக இருந்தது. பின்னர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் டோரா, சமுகத்திற்கு கருத்து சொல்லும் அறம் போன்ற படங்கள் பெரிய வெற்றியை தேடி தந்தன.
தற்போது இன்று வெளியாகியுள்ள கோகோ படம் பற்றி பார்க்கலாம். பிளாக் காமடி திரில்லராக வெளியாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் நயன்தாரா சாதாரண பெண்ணாக, ரங்கோலி போடும் கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் அவர் கைது செய்யப்படுகிறார். எளிமையான பாவாடை, சட்டையுடன் கிளாமர் எதுவும் இல்லாமல் இயல்பாக நடித்துள்ள அனைவரையும் பாராட்டியும் பெறுகிறார்.

இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் நெல்சன், இந்த படத்தின் கதையை எளிதாக சொல்லி விட முடியாது. கிரைம், காமடி, மற்றும் குடுமப் டிராமா எல்லாம் கலந்ததே இந்த கதை. இதில் கோகிலாவாக நடித்துள்ள நயன்தாரா, எதிர்பார்த்தைவிட சிறப்பாகவே நடித்துள்ளனர். பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மொத்தமாக மாறுபட்ட அனுபவத்தை படம் பார்ப்பவர்களுக்கு அளிக்கும் என்றார்.
இந்த படத்தில் சரண்யா, யோகி பாபு மற்றும் ஆர்எஸ் சிவாஜி ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்தின் முக்கிய ஹைலைட்டே அனிருத்தின் மியூசிக் தான் படத்தில் வரும் “கல்யாண வயசு” பாடல் அனைவரையும் கவருகிறது. இந்த படத்தில் இரண்டு பிரோமோகள் நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் உருவாக்கியது தான் என்பது கூடுதல் தகவல்.

படத்துக்கு மிக பெரிய பலம் யோகிபாபு காமெடி என்று தனியாக இல்லாமல் கதையோடு ஒன்றி அமைத்திருப்பது இயக்குனரின் பலம் முதல் பாதியில் சிறது நேரம் வரும் யோகி பாபு இரண்டாம் பாகத்தில் கதையோடு கலந்து காமெடியில் அற்புதபடுத்தியுள்ளார் என்று தான்சொல்லனும் யோகிபாபு தமிழ் சினிமாவுக்கு கிடையத மிக பெரிய சொத்து
தமிழ் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ள இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது நயன்தாரா நடிப்பில் வரும் செப்டம்பரில் வெளியாக உள்ள இமைக்கா நொடிகள் படத்திற்கு நல்ல வர்த்தக ரீதியாக நல்ல ஆதரவை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் கோகோ, நயன்தாராவின் சிறந்த படங்களில் வரிசையில் இடம் பிடிக்கும்.
