Monday, June 22
Shadow

இயக்குனர் கதையாசிரியர் மற்றும் நடிகர் லிவிங்ஸ்டன் பிறந்த தினம் இன்று

இவர் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். திரைப்படங்களுக்காக ராஜன் என்ற பெயரினை தொடக்கக்காலத்தில் பயன்படுத்தினார். 1988ல் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். 1996ல் சுந்தரப் புருசன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

80 மற்றும் 99களின் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் நடிகைகளில் லிவிங்ஸ்டன் மற்றும் அம்பிகா ஆகியோர் அடக்கம். இருவரும் தற்போது சினிமாவை விட்டு விலகி நின்றாலும் அவ்வப்போது படங்களில் தலை காட்டி வருகின்றனர். இதில் லிவிங்ஸ்டனுக்கு ஜோவிதா மற்றும் ஜெம்மா என இரண்டு பெண்கள் வாரிசுகளாக உள்ளனர்.

இதில் ஜோவிதா தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க போகிறார். மேலும், நடிகை அம்பிகாவிற்கு ராம் கேசவ் மற்றும் ரிஷிகேசவ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ராம் கேசவ் லிவிங்ஸ்டன் மகளுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இவர் நடித்த படங்கள்

கன்னிராசி, காக்கிச் சட்டை, அறுவடை நாள், சுந்தர புருசன்