
இளைய தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாக உள்ள சர்க்கார் திரைப்படத்தை சன் பிக்கர்ஸ் வாங்கியுள்ளதும், இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது ஏற்கனவே தெரிந்தது.
இந்நிலையில், இந்த படத்தின் ஆடியோ வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆடியோ வெளியிட்டை பெரிய விழாவாக கொண்டாட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக நெருக்கிய வட்டார தகவல்கள் தெரிவிகின்றன.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாக்கியுள்ள உள்ள இந்த படத்தின் பாடல்கள், வரும் அக்டோபர் மாதம் 2ம்தேதி வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் பாடலாசிரியர் விவேக் எழுதிய பாடல் வரிகளை, பின்னணி பாடகர்கள் பாட உள்ளனர் என்று தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சர்க்கார் பட தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சர்க்கார் படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இன்று மாலை வெளியாகும் அறிவிப்பில், சர்க்கார் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களுடன் டீசர்/டிரைலர் வெளியிட்டு குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று தெரிகிறது.
சர்க்கார் படத்தில், கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், சேகர் பிரசாத் எடிட்டிங்கில் உருவாக்கி வரும் இந்த படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, ராதா ரவி, யூகி பாபு, பிரேம் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.#sarkar #vijay
