சர்கார் படக்கதை விவகாரம் இயக்குனர் முருகதாஸ் விளக்கம்
சர்கார் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தீபாவளிக்கு வெளியாக தயாராக உள்ளது இந்த படத்தை உலக தமிழர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர் இதற்கிடையில் இந்த படத்தின் கதை திருட்டு கதை என்று மிக பெரிய பிரச்னை உருவாகியுள்ளது
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எழுத்தாளரும் உதவி இயக்குனருமான வருண் ராஜேந்திரன் என்பவர் சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்றும், செங்கோல் என்ற பெயரில் அக்கதையை தென் இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருப்பதாகவும் கூறினார்.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சர்கார் படத்துக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்தார். மேலும் திரைப்பட எழுந்தாளர்கள் சங்கத்திலும் புகார் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட...








