Monday, April 20
Shadow

வெங்கட் பிரபுவின் “பார்டி” படத்தின் சாடிலைட் உரிமையை வாங்கியது சன் டிவி

வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகியுள்ள ‘பார்ட்டி’ படம் ரீலிஸ்சுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சாடிலைட் உரிமையை சன் டிவி வாங்கியது, ப்டகுளுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தகவலை வெளியிட்ட படத்தின் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா, “பார்டி” படத்தின் சாடிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது மிகவும் மகிழ்சியளிகிறது. ஏன்என்றால், சன் நிறுவனம், பல படங்கள் பெரியளவில் வெற்றியடைய காரணமாக இருந்துள்ளது தான். பார்டி படமும் இந்த முறையில் வெற்றியும் என்று நம்புகிறேன் என்றார்.
மேலும் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா, படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ,

இந்தப் படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா காஸண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல். பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.