
சிவா மனசுல சக்தி திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சயப்பட்டவர் அனுயா, துபாயில் பிறந்து வளார்ந்த இவர்,மாடலிங் மற்றும் நடிப்பில் ஈடுபட்டிருந்தார்.மேலும் பூனே-வில் உள்ள டெலிவிஷன் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்-இல் படித்து முடித்தவர் “chilfren’s film” எனும் ஆவனப்படத்தில் ஆசிரியை வேடம் ஏற்று நடித்தார்.
தொடர்ந்து மதுரையை பின்னனியாக வைத்து எடுக்கப்பட்ட “மதுரை சம்பவம்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார், 2011-இல் சங்கர் இயக்கத்தில் வெளியான “நண்பன்” திரைப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்தார்,2012-ஆம் ஆண்டு விஜய் ஆண்டனியின் “நான்” திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.
தற்போது கன்னடத்தில் “ஏக் தா ரஸ்தி” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார், இது ரீலீசிற்கு தயாராக உள்ளது. இப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியவர், இரண்டாம் வாரம் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இவர் நடித்த திரைப்படங்கள்
மகேக், சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், கோரா, நான்
