வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்தில் கலக்கும் ஷாம்..!
சமீப காலமாக கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் ஷாம், படங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு, நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என செலக்டிவாக நடித்து வருகிறார்..
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான ‘புறம்போக்கு’ படமாகட்டும்; மற்றும் ரசிகர்களின் மனதிற்கு மிக நெருக்கமாக ஷாமை கொண்டுபோய் சேர்த்த ‘6 மெழுகுவர்த்திகள்’ படமாகட்டும், என்றைக்கும் அவரது நடிப்பை நினைவுகூரும் விதமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
அந்தவகையில் தற்போது அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘பார்ட்டி’ படத்தில் கலக்கலான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் ஷாம்..
இந்த படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது,
“அம்மா கிரியேஷன்ஸ் சிவா, எனது அண்ணன் போன்றவர். என்னுடைய திரையுலக பயணத்தில் மிகுந்த அக்கறை காட்டுபவர்.
அவரிடமிருந்து திடீரென ஒருநாள் அழைப்பு வந்தது.. ...