Tuesday, April 21
Shadow

நடிகை பிரியா ராமன் பிறந்த தினம் இன்று

இவர் தமிழ், மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் இரண்டு மொழிகளிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவருடைய முதல்ப் படம் ரஜினிகாந்த் தயாரித்த வள்ளி என்ற திரைப்படம். (இவர் தற்போது செம்பருத்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.)

இவர் பொன் விலங்கு, சிந்து நதி பூ, மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி, பசுபதி மே பா ராசக்காபாளையம் உள்பட பல படங்களில் நடித்த ரஞ்சித் என்பவரை திருமணம் செய்து செய்து கொண்டார். இவர் ‘பீஷ்மர்’ என்ற படத்தை இவர் இயக்கி, கதாநாயகனாக நடித்தார்.

இவரும், வள்ளி, சூரியவம்சம் உள்பட பல படங்களில் நடித்த பிரியா ராமனும் ‘நேசம் புதுசு’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள்.

அப்போது, இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 1999-ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஆதித்யா (வயது 7), ஆகாஷ் (3) என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

ரஞ்சித்துக்கும், பிரியா ராமனுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இரண்டு பேரும் விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி, தாம்பரத்தில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு செய்தார்கள். கடந்த 6-ந் தேதி இருவருக்கும் விவாகரத்து அளித்து தீர்ப்பு கூறப்பட்டது.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்

வள்ளி, சுப்ரமணிய சாமி, சுவராசியம், பொன்மனம், ஹரிச்சந்திரா, புதுமைப்பித்தன், சின்ன ராஜா,நேசம் புதிது

இவர் நடித்த தொலைக்காட்சி தொடர்கள்

ஸ்ரீ துர்கா, செம்பருத்தி, ஜீன்ஸ் (சீசன் 3)