Wednesday, October 28
Shadow

நடிகை பிரியா ஆனந்த் பிறந்த தினம் இன்று

பிரியா ஆனந்த், தமிழ், தெலுங்கு,இந்தி திரைப்பட நடிகையாவார். தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழ் பேசும் தந்தைக்கும் தெலுங்கு மற்றும் மராத்தி பேசும் தாய்க்கும் பிறந்ததாலும், ஐதராபாத்து, சென்னை ஆகிய இடங்களில் வளர்ந்ததாலும், தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாகப் பேசுவார். ஆங்கிலம், வங்காள மொழி, இந்தி, மராத்தி, எசுப்பானியம் ஆகிய மொழிகளையும் பேசுவார். அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று பின்னர் சென்னை திரும்பினார். இதுவரை பதின்னைந்து தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்

வாமணன், புகைப்படம், நூற்றெண்பது, வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, கான், LKG, முத்துராமலிங்கம், கூட்டத்தில் ஒருத்தன் , த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, எதிர்நீச்சல்,
இங்கிலீஷ் விங்கிலிஷ்