
உபேந்திரா, கன்னடத் திரைப்பட நடிகர். இவருக்கு சூப்பர் ஸ்டார், ரியல் ஸ்டார் என்ற பெயர்களும் உண்டு. பிரபல கன்னட நடிகரும், இயக்குநருமான உபேந்திரா இதுவரை 49 திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஷாலுடன் இணைந்து தமிழில் ‘சத்யம்’ படத்திலும் நடித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் இவர் தனது மனைவி நடிகை பிரியங்கா திரிவேதியுடன் மஜத வேட்பாளர் கீதா சிவராஜ்குமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போதே அவர் அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்தபோதிலும் அவர் சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துகளை எழுதி வந்தார்.
