
சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியும் நேரடி மோதல் நடக்க இருக்கிறது ஆனால்இந்த மோதலில் விஜய் இல்லை அவரும் இருந்து இருந்தால் உண்மையான நேரடி போட்டியாக இருந்து இருக்கும் என்ன யோசிக்கிரிங்கள் ஆம் வரும் பொங்கலுக்கு அஜித் மற்றும் ரஜினிகாந்த் நேரடி மோதல் புரியவில்லையா இந்த பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட படமுமும் நேரடி மோதல் இருக்கு இதுல யாருட வெற்றி என்பதை பொருத்து இருந்து தான் பாக்கணும்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் பேட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர் விரைந்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக் போன்றவர்கள் வில்லனாக நடித்திருப்பதால் வழக்கமான ரஜினி படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட பல மடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
போதாகுறைக்கு, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் ஆகியோர் இருக்கின்றனர். தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் காத்திக் சுப்புராஜ் எப்படி ரஜினியை காட்டப்போகிறார்.. “பேட்ட” என்று பெயரிட்டிருப்பதால் நிச்சயம் பல அதிரடிக் காட்சிகள் இருக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். பொங்கல் என்றவுடனே தியேட்டர் எங்களுக்குத்தான் என அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் ரிசர்வ் செய்யபட்ட டேபிள் மேல் நேம் போர்டு வைத்ததுபோல் ஸ்ட்ராங்காக உள்ளது. ஒரு “தல” என்றாலே ரசிகர்கள் தலை கால் புரியாமல் ஆடுவார்கள். இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பது தெரிந்த விஷயம். மேலும் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா என பல நல்ல விஷங்கள் இருப்பதால் போட்டியில் எது வெற்றிபெறும் என கணிக்க முடியவில்லை.
அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள ரஜினி, மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். ரசிகர்கள்தான் உறுப்பினர்களாக மாறுகிறார்கள் என்பதால், படம் ரிலீஸாகும்போது போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது, பட்டாசு வெடித்து கொண்டாடக்கூடாது என அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. பொதுவாக அஜித் ரஜினி படங்களுக்கு ஓபனிங் நன்றாக இருக்கும். ஓபனிங் ரேசைத் தாண்டி எந்த படம் ஜெயிக்கிறது என்பதுதான் முக்கியம்
