Thursday, October 29
Shadow

நடிகை அக்சரா ஹாசன் பிறந்த தினம் இன்று

இவர் பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசனின் மகளாவார். ஏழாம் அறிவு, 3 ஆகிய திரைப்படங்களில் நடித்த சுருதி ஹாசன், இவரது மூத்த சகோதரியாவார். மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தில் கவுதம் கார்த்திக்குடன் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்து விட்டார்.

அக்சரா ஹாசன் அவரது தாயாருடன் மும்பையில் வசித்து வருகிறார். அக்சரா ஹாசன், அக்டோபர் 12, 1991 அன்று சென்னையில் நடிகர்கள் கமல்ஹாசன், சரிகா தம்பதிக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார். இவரது தந்தை தமிழ் வம்சாவளியையும், அவரது தாயார் மராத்தி மற்றும் ராஜ்புட் வம்சாவளியையும் சேர்ந்தவர்களாவர். சூர்யாவுடன் ஏழாம் அறிவு திரைப்படத்திலும், தனுஷ் உடன் 3 திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்த நடிகை சுருதி ஹாசன் இவரது மூத்த சகோதரியாவார். அக்சரா ஹாசன் தனது பள்ளிப்படிப்பை சென்னையிலும், பின்னர் பெங்களூர் இண்டஸ் சர்வதேச பள்ளியிலும் பயின்றவராவார்.

அக்சரா ஹாசன் தென்னிந்திய திரைப்பட கதாநாயகன் கமலஹாசனுக்கும், வட இந்திய புகழ் பெற்ற நடிகை சரிதாவிற்கும் இரண்டாவது மகளாக 1991 அக்டோபர் 12 இல் பிறந்தார் . அக்சரா சென்னையில் அபாகஸ் மாண்டிசோரி பள்ளி யில் படித்தார் .பின்னர் லேடி ஆண்டாள் ஸ்கூலில் படித்தார் .இவ்வமையம் இவருடைய தாயும் ,தந்தையும் பிரிய நேரிட்டதால் இவர் தன் அன்னையுடன் மும்பையில் வசிக்க நேரிட்டது . மற்றொரு உடன் பிறப்பு ஸ்ருதி ஹாசன் சென்னையிலேயே தந்தையுடன் தங்கி விட்டார்

நடிகை ஆகும் முன்னே ,முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அமிதாப்பச்சனுடன் பேச்சு வார்த்தை நடத்தி , அவரையும் மையப்படுத்தி தனுஷ் கதாநாயகனாக நடிக்க ஷமிதாப் என்ற இந்தி படத்தில் நடித்தார் .ஆனால் எதிர்பார்த்தபடி இந்த படம் வரவேற்கப்படவில்லை . இதற்கு முன்னதாக மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிப்பதற்கு ,வாய்ப்பு கிடைத்தும் நடிக்க மறுத்து விட்டார் .. பின்னர் தமிழில் அஜித்குமார் உடன் விவேகம் படத்தில் நடித்தார் . இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சில படங்களில் ஒப்பந்தம் செய்யப்ப ட்டுள்ளார் . தன்னுடைய தந்தை இயக்கி வரும் சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குனர் ஆக பணிபுரிந்து வருகிறார் .

அக்சரா ஹாசன் அவரது தாயாருடன் மும்பையில் வசித்து வருகிறார்.[4] இளமையிலேயே கடவுள் நம்பிக்கையை இழந்தார் .தற்போது புத்த மத கோட்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார் .சென்னையில் உள்ள ஹாட் ஷூ டான்ஸ் கம்பெனியில்தான் அக்சரா பால் ரூம் டான்ஸ் கற்றுக் கொண்டுள்ளார். அக்சரா, இங்கிலாந்தின் பால் ரூம் தொழில்முறை நடனக் கலைஞர்கள் பயிற்சி அமைப்பு நடத்திய முதலாவது பரீட்சை தேறியுள்ளார்

இவர் நடித்த திரைப்படங்கள்

விவேகம்

இவர் துணை இயக்குனராக பணியாற்றிய படம்

சபாஷ் நாயுடு