
இசைஞானி இளையராஜா இந்திய சினிமாவுக்கு மட்டும் இல்லை உலக இசைக்கு ஒரு பொக்கிஷம் என்று தான் சொல்லணும் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து கேள்வி ஞானம் மூலம் இசையறிந்த இளையராஜா இசை உலகின் மூடிசூடமன்னனாக திகழ்கிறார். இந்திய இசையை உலக அளவுக்கு கொண்டுபோன பங்கு இவருக்கும் உண்டு .
சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அப்போது, இசை இருக்கும் வரை தான் இருப்பேன் என்று இளையராஜா பெருமிதத்துடன் தெரிவித்தார்.இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைஞானி இளையராஜா. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். 20,000 மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். அவர் வெளிநிகழ்ச்சிகளில் அதிக அளவில் கலந்துகொள்வதில்லை. இந்நிலையில், இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜூன் 2-ம் தேதி இவரின் பிறந்த நாள் என்றபோதும், 75-வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் கல்லூரிகளில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில், பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், பங்கேற்பதற்காக விழா அரங்கிற்குள் இளையராஜா நுழைந்ததும் மாணவிகளின் உற்சாக குரலால் அப்பகுதியே அதிர்ந்தது.இதையடுத்து, மாணவிகள், இளையராஜாவின் பிரபல பாடல்களை பாடி, அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து, கேக் வெட்டி அவருக்கு பிறந்தநாள் கொண்டாடினர்.
இதனை தொடர்ந்து பேசிய இளையராஜா, தனது இசையில் வெளியாகி புகழ்பெற்ற ஒருசில பாடல்களை பாடினார்.மேலும் பாடல்கள் உருவான பின்னணி குறித்த சுவாரஸ்ய தகவல்களை மாணவிகளுடன் அவர் பகிர்ந்துகொண்டார். ஏ.வி.எம். ஸ்டுடியோ, ரஜினி, கமலை நம்பி சென்னைக்கு வரவில்லை என்றும், ஆர்மோனியத்தையும், தனது திறமையையும் நம்பியே வந்ததாகவும் கூறினார். எனவே, மாணவிகள் தங்களது திறமை மீது முழு நம்பிக்கை வைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று இளையராஜா அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, பொதுவாக பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட மாட்டேன் என்றார். இருந்த போதும், மாணவிகளின் அன்புக்கு இணங்க அவர்களின் அழைப்பை ஏற்று இங்கு வந்ததாக கூறினார்.
