
சண்டைகோழி படம் விஷால் லிங்குசாமி கூட்டணியில் வந்த மிக பெரிய வெற்றி படம் இந்த கூட்டணி மீண்டும் இணையவில்லை சுமார் பதினைந்து வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இருகிறார்கள் அதுவும் சண்டைகோழி இரண்டாம் பாகம் என்று முதல் பாகம் இயக்குனர் லிங்குசாமிக்கு மட்டும் இல்லை நாயகன் விஷாலுக்கும் தமிழ் சினிமாவில் மிக பெரிய இடத்தை கொடுத்த படம் என்பதால் இந்த படத்துக்கு மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பு உள்ள படம்
விஷாலுக்கு தொடர் வெற்றிகள் இயக்குனர் லிங்குசாமிக்கு வெற்றி அவசியம் என்ற நிர்பந்தத்தில் வந்துள்ள படம் தான் இந்த படம் இந்த சண்டைகோழி2 இரண்டாம் பாகம் முதல் படம் போல பல மடங்கு இருக்கும் என்று விஷாலும் இயக்குனர் சொல்லி இருகிறார்கள் இதனால் இந்த படத்துக்கு மேலும் எதிர்பார்ப்புகள் சரி படத்தை பார்ப்போம்
படத்தின் கதாநாயகனாக வரும் பாலு (விஷால்) மற்றும் அவரது தந்தை அய்யா (ராஜ்கிரண்) ஆகியோா் ஊரின் முக்கயிஸ்தா்களாக திகழும் நிலையில் அவா்களுக்கு எதிராக பேச்சி (வரலட்சுமி சரத்குமாா்) செயல்படுகிறாா். விஷாலுக்கு நிகரான கம்பீரத்துடன் வரலட்சுமி தோன்றியுள்ளாா்.
சண்டக்கோழி முதல் பாகத்திற்கும் தற்போதைய 2ம் பாகத்திற்கும் பெரிய அளவில் தொடா்பு இருந்ததாக தொியவில்லை. பெரும்பாலான காட்சிகள் திருவிழா செட்டப்பிலேயே நகா்கின்றன. ஆக்ஷன் படம் என்பதை படக்குழுவினா் அடிக்கடி நிரூபித்துள்ளனா்.
அந்த வகையில் படத்தில் சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. முதல்முறையாக விஷாலுடன் இணைந்து நடித்துள்ள கீா்த்தி சுரேஷ் நகைச்சுவை, காதல் கலந்த வேடத்தில் நடித்துள்ளாா். படத்தில் விஷால் குடும்பத்தினா், வரலட்சுமி மற்றும் சிறிய எதிரிகளுக்கு இடையே நடக்கும் சண்டைக் காட்சிகளுடன் படம் நகா்கின்றது.
யுவன்ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் வலுசோ்க்கும் வகையில் அமைந்துள்ளது. சண்டக்கோழி படத்தின் முதல் பாகத்தை பாா்த்தால் தான் சண்டக்கோழி 2 புரியும் என்று ரசிா்கள் ஐய்யம் கொள்ள தேவையில்லை.
படத்தில் ராஜ்கிரண் கம்பீரமும் விஷாலின் அதிரடியும் மேலும் பலம் சேர்த்துள்ளது படத்துக்கு மிகபெரிய பலம் என்றால் அது கீர்த்திசுரேஷ் அதிரடி சண்டைகள் விறுவிறுப்பாக போகும் கதை களத்தில் கீர்த்தி வரும் இடங்கள் நம்மை மீறி ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறார் மீரா ஜாஸ்மின் அளவுக்கு இல்லை என்றாலும் அவரை தொடுகிறார் இதுவரை கீர்த்தி சுரேஷ் நடித்ததில் இது ஒரு முத்திரை என்று சொல்லலாம்
விஷால் எப்பவும் போல சண்டைகாட்சகளிலும் வசனம் போசும் காட்சிகளில் மிளிர்கிறார் படத்துக்கு மேலும் பலம் வரலக்ஷ்மி அவரின் தோற்றமும் நடிப்பும் மிரளவைக்கிறார்.
மொத்தத்தில் சண்டகோழி 2 மிரட்டல் Rank 3.5/5
