
ஆன்மே கிரியேஷன்ஸ் மிகுந்த பொருட்செலவில் தமிழ், ஹிந்தி, ஆகிய இரு மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “மேடி @ மாதவ்” (Maddy @ Madhav).
மாஸ்டர் அஞ்சய் அறிமுக நாயகனாக நடிக்கும் “மேடி @ மாதவ்” விஞ்ஞான அறிவையும் – தாய்ப்பாசத்தையும் மையக்கருவாக கொண்டு உருவாக்கப்படும் இத்திரைப்படம் நாளைய இந்தியாவை வல்லரசாக மாற்ற உதவும்.
அரிய கண்டுப்பிடிப்பையும், இளைய சமுதாயத்தின் திறமைகளையும் ஒருங்கிணைந்து புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு முதல் விதையாக இத்திரைப்படம் அமையும்.
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. “மாதவ்” கதாபாத்திரத்தில் நடிக்கும் “Master Anjay” புலியுடன் நடித்த காட்சிகள் தொடர்ந்து 8 நாட்கள் படமாக்கப்பட்டது. இப்படத்தின் சிறப்பம்சமாகும். வீரமும், விவேகமும் மிகுந்த “மாதவ்” கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் அஞ்சயுடன், இளைய திலகம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ரிச்சா பாலோட், வையாபுரி, முத்துக்காளை, ரியாஸ்கான், பானு பிராகாஷ், ரோஷிணி வாலியா, ஆதர்ஷ் ஆகியோருடன் “இனிது இனிது” பட நாயகன் அதித் மற்றும் புதுமுகம் நேகாகான் இருவரும் இளஞ்ஜோடிகளாக நடிக்கின்றனர்.
அறிமுக வில்லன்களாக மும்பை நடிகர்கள் ஜுல்பி சையத், ஷாவெர் அலி ஆகிய இருவரும் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
இத்திரைப்படம் கோவா – மூனாறு – செர்ராய் கடற்கரை – நிலம்பூர் சாலக்குடி, பொள்ளச்சி, சென்னை ஆகிய இடங்களில் 100 நாட்களுக்கு மேலாக படப்படிப்பு நடைபெற்றது.
சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர் என அனைத்து தரப்பினரும் ரசிக்கும் விதமாக மேடி @ மாதவ் திரைப்படத்தின் கதையும், திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் கதை- திரைகதையை எழுதி அனில்குமார் தயாரிக்கிறார். புதுமுக இயக்குனர் பிரதீஷ் தீபு இயக்குகிறார். போக்கிரி திரைப்படத்தின் வசனகர்த்தா வி. பிரபாகர் இணை திரைக்கதை எழுத, அஜயன் வின்செட் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பு – வி.டி விஜயன், எஸ்.ஆர். கணேஷ்பாபு, கலை தோட்டாதரணி, சண்டைக்காட்சிகள் அன்பு-அறிவு, நா. முத்துகுமார் – குட்டி ரேவ்திஎளுடிய பாடல்களுக்கு அவுஸாபச்சன், இஷான் ஆகியோர் இசையமைகின்றனர். நடனம் – பிரசன்னா, மும்பை நடன இயக்குனர் ரிச்சார்ட்,
