Sunday, June 28
Shadow

இயக்குனர் நலன் குமரசாமி பிறந்த தினம் இன்று

கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் குறும்படங்கள் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்த இவர் தோட்டா விலை என்ன?, ஒரு படம் எடுக்கணும், நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க குறும்படங்களை இயக்கியுள்ளார். சூது கவ்வும் எனும் முழு நீள திரைப்படத்தின் மூலம் பெரும் கவனத்தைப் பெற்றார். திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் இவர் நிகழ்ச்சி மேலாண்மை (Event Management) மற்றும் நிலம் விற்பனை பணிகளைச் செய்து வந்தார்.

இவர் நடித்த படங்கள்

பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா

இவர் திரைக்கதை எழுதிய திரைப்படம்

தீயா வேலை செய்யணும் குமாரு, மாயவன்

இவர் இயக்கிய திரைப்படங்கள்

சூது கவ்வும், காதலும் கடந்து போகும்